பிகினியில் மனம் மயக்கும் சாரா அலி கான்!
நடிகை சாரா அலி கானின் பிகினி புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.
பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலி கானின் மகள் தான் சாரா அலி கான். சைப் அலி கான் மற்றும் அம்ரிதா சிங் ஜோடியின் மகள் இவர். சாரா அலி கான் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கேதார்நாத் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து சிம்பா, லவ் ஆஜ் கால், கூலி நம்பர் 1 ஆகிய படங்களில் நடித்தார்.
தற்போது சாரா அலி கான் தனுசுடன் ‘அத்ரங்கி ரே’ என்ற படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ளார். நடிகர் அக்ஷய் குமாரும் அந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சாரா அலி கான் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதற்கு காரணம் சாரா வெளியிடும் போட்டோஷூட்கள் தான். தற்போது சாரா அலி கான் வெளியிட்டுள்ள பிகினி புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.