ஹீரோயின் ஆகும் குழந்தை நட்சத்திரம் சாரா அர்ஜுன்.. 39 வயது நடிகருக்கு ஜோடியா?
தமிழ் உட்பட சில மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுன் தற்போது 19 வயதில் இருக்கும் நிலையில் அவர் பாலிவுட் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க இருப்பதாகவும் அவர் 39 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விக்ரம் நடித்த ’தெய்வத்திருமகள்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா அர்ஜுன். அதன்பின் அவர் ’சித்திரையில் நிலாச்சோறு’ ’சைவம்’ ’விழித்திரு’ ’சில்லு கருப்பட்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில் ’பொன்னின் செல்வன்’ படத்தின் இரண்டு பாகங்களிலும் இளம் வயது நந்தினியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது சாரா அர்ஜுன் ஒரு பாலிவுட் திரைப்படத்தில் நாயகி ஆக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை ஆதித்ய தார் என்பவர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சாரா அர்ஜுன் ரன்வீர் சிங் ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் 39 வயது ரன்வீர்சிங்கிற்கு ஜோடியாக 19 வயது சாரா நடிப்பதா? என்றும், ரன்வீர் சிங் முதல் படத்தில் நடித்த போது சாராவுக்கு வெறும் 5 வயது தான் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் தீபிகா படுகோன் உள்ளிட்ட பல ஹீரோயின்கள் 20 வயது வித்தியாசத்தில் இருக்கும் ஷாருக்கான், சல்மான் கானுடன் நடிகர்களுடன் நடிக்கும்போது ரன்வீர் சிங் உடன் சாரா நடிக்க கூடாதா என்ற கேள்வியையும் நெட்டிசன்களே எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.