நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் ஷாருக்கான் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செவ்வாயன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியைக் காண நடிகர் அகமதாபாத்தில் தங்கி இருந்தார். அவர் நேற்று நடைபெற்ற போட்டியையும் மைதானத்திற்கு சென்று நேரில் கண்டுகளித்தார். இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டதை அடுத்து அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருந்தாலும் அவர், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். மருத்துவமனையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நடிகர் ஷாருக்கானின் நெருங்கிய தோழியும் நடிகையுமான ஜூஹி சாவ்லா ஷாருக்கானை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்தார். மருத்துவமனையின் அதிகாரபூர்வ அறிக்கை விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.