ஷாருக் கான்- ராஜ்குமார் ஹிரானி கூட்டணியின் புதிய பட டைட்டில் & ரிலீஸ் தேதி அப்டேட்!

shah-rukh-in-dunki

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.   

ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். ப்ரியாமணி, சானியா மல்ஹோத்ரா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  

அந்தப் படத்தை அடுத்து ஷாருக்கான் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி கூட்டணி அமைக்கிறார். ராஜ்குமார் ஹிரானி அமீர் கான் நடிப்பில் வெளியான 'பீகே', 3 இடியட்ஸ் உள்ளிட்ட பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.  இந்த படத்தில் டாப்ஸி கதாநாயகியாக நடிக்கிறாராம். மேலும் கஜோல் ராஜ் குமார் ராவ், மனோஜ் பாஜ்பாயி, வித்யா பாலன், போமன் இரானி என ஸ்டார் நடிகர்களின் சங்கமமாக இப்படம் உருவாக இருக்dunkiகிறதாம். 

வரும் மே மாதம் இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

தற்போது இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஷாருக் கான் மற்றும் ராஜ்குமார் ஹிரானி இருவரும் படத்தைப் பற்றி நகைச்சுவையாகப் பேசிக் கொள்கின்றனர். படத்திற்கு டங்கி(Dunki) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி வெளியாகி இருப்பதாக அறிவித்துள்ளனர். 

Share this story