நடிகர் சல்மான் கானை தொடர்ந்து ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்

sharukh khan

நடிகர் சல்மான்கானைத் தொடர்ந்து நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சல்மான்கானுக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில்கூட ரூ.5 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக காவல்துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மிரட்டல் விடுத்தவர் மகாராஷ்டிர அமைச்சர் பாபா சித்திக் கொலையில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் என்று கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர் ரூ. 50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மும்பை பந்த்ரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சைபர் குற்றப்பிரிவு போலீசாருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

sharuk சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் இருந்து அந்த அழைப்பு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பிஷ்னோய் சமூகத்தில் புனிதமான விலங்காகப் பார்க்கப்படும் `பளாக்பக்ஸ்' மான் வகையை , கடந்த 1998ம் ஆண்டு நடிகர் சல்மான்கான் வேட்டையாடியதாகக் குற்றஞ்சாட்டப்டது. அதுதொடர்பாக, அச்சமூகம் அவரை மன்னிப்பு கேட்கச் சொல்லி வலியுறுத்தி வருகிறது. இதன்காரணமாகவே, அவர் அந்தக் கும்பலால் குறிவைக்கப்படுகிறார். கொலை முயற்சி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரே வருடத்தில் பதான், ஜவான் என இரண்டு ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் கொண்ட படங்கள். அடுத்ததாக ராஜ்குமார் ஹிரானியுடன் உறுதியாக ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கையோடு டங்கி என 59 வயதிலும் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறார் ஷாருக்கான்.நடிகர் சல்மான்கானைத் தொடர்ந்து நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சல்மான்கானுக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில்கூட ரூ.5 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக காவல்துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மிரட்டல் விடுத்தவர் மகாராஷ்டிர அமைச்சர் பாபா சித்திக் கொலையில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் என்று கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர் ரூ. 50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மும்பை பந்த்ரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சைபர் குற்றப்பிரிவு போலீசாருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் இருந்து அந்த அழைப்பு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பிஷ்னோய் சமூகத்தில் புனிதமான விலங்காகப் பார்க்கப்படும் `பளாக்பக்ஸ்' மான் வகையை , கடந்த 1998ம் ஆண்டு நடிகர் சல்மான்கான் வேட்டையாடியதாகக் குற்றஞ்சாட்டப்டது. அதுதொடர்பாக, அச்சமூகம் அவரை மன்னிப்பு கேட்கச் சொல்லி வலியுறுத்தி வருகிறது. இதன்காரணமாகவே, அவர் அந்தக் கும்பலால் குறிவைக்கப்படுகிறார். கொலை முயற்சி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரே வருடத்தில் பதான், ஜவான் என இரண்டு ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் கொண்ட படங்கள். அடுத்ததாக ராஜ்குமார் ஹிரானியுடன் உறுதியாக ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கையோடு டங்கி என 59 வயதிலும் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறார் ஷாருக்கான்.

Share this story