பிறந்த நாளில் வீட்டு பால்கனிக்கு வராமல் போன ஷாருக்கான்... ஏமாற்றத்துடன் திரும்பிய ரசிகர்கள்

srk

பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் மனைவி மற்றும் மகள் சுஹானா முன்னிலையில் சாக்லேட் கேக் வெட்டினார். சுஹானா கைதட்டி தனது தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தொடர்பாக புகைப்படங்களை ஷாருக்கான் மனைவி கெளரி கான் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

ஷாருக்கானின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக மும்பை முழுவதும் இருந்து ஏராளமான ரசிகர்கள் ஷாருக்கான் வீட்டு முன்பு குவிந்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஷாருக்கான் தனது பிறந்த நாளன்று தனது வீட்டில் இருக்கும் பால்கனிக்கு வந்து ரசிகர்களை பார்ப்பது வழக்கம். எனவே ரசிகர்கள் நேற்று இரவு வரை ஷாருக்கான் வருவார் என்று காத்திருந்தனர். ஆனால் நேற்று ஷாருக்கான் தனது வழக்கமான ரசிகர் தரிசனத்தை கொடுக்கவில்லை.srk

அவரைப் பார்க்காமல் போகமாட்டேன் என்று வீட்டுக்கு வெளியே நீண்ட நேரம் ரசிகர்கள் காத்திருந்தனர். இரவு வரை காத்திருந்த ரசிகர்கள் அதிருப்தியுடன் கலைந்து சென்றனர் முன்னதாக ரசிகர் கிளப் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான் கலந்து கொண்டார். அதோடு பிறந்தநாளையொட்டி தனது வீட்டிற்கு வந்திருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஷாருக்கான் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் மாலைப்பொழுதை சிறப்பானதாக மாற்றியமைக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this story