ஓடிடி தளத்தில் வெளியானது ஷாருக்கானின் டன்கி

ஓடிடி தளத்தில் வெளியானது ஷாருக்கானின் டன்கி

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஜவான். இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, தீபிகா படுகோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் ஆயிரத்து நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. ஜவான் படத்தை தொடர்ந்து ஷாருக்கான் நடித்துள்ள படம் டன்கி. இந்த படத்தில் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்சி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து சதீஷ் ஷா, விக்கி கௌஷல், தியா மிர்சா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 21-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. 

ஓடிடி தளத்தில் வெளியானது ஷாருக்கானின் டன்கி

இந்நிலையில் டன்கி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிரபல நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டன்கி திரைப்படம் வெளியாகி உள்ளது.

Share this story