ஷாருக்கானின் ‘ஜவான்’ வசூல் முறியடிப்பு: இந்திய அளவில் ‘ஸ்ட்ரீ 2’ மாபெரும் சாதனை!

street 2

இந்திய அளவில் அதிக வசூல் செய்த இந்திப் படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது ’ஸ்ட்ரீ 2’ பாலிவுட் படம்.

ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியான ‘ஸ்ட்ரீ 2’ திரைப்படம் தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்தது. வார இறுதி நாட்களில் டிக்கெட்கள் கிடைக்காத வண்ணம் மக்கள் கூட்டம் அலைமோதியதால் கண்டிப்பாக வசூல் சாதனை புரியும் என்று கருதப்பட்டது. தற்போது, இந்திய அளவில் அதிக வசூல் செய்த இந்தப் படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. முதல் இடத்தில் இருந்த ஷாருக்கான் நடித்த ஜவான் (582.84 கோடி) படத்தை பின்னுக்கு தள்ளி 586 கோடி வசூல் செய்திருக்கிறது. இதனால் திரையுலகினர் பலரும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள்.
 Stree 2
‘ஜவான்’, ‘கடார் 2’, ‘பதான்’, ‘அனிமல்’, ‘பாகுபலி 2’ என வரிசையாக அனைத்து படங்களின் வசூல் சாதனையையும் ஒவ்வொன்றாக உடைத்து முதல் இடத்தை பிடித்திருக்கிறது. காமெடி, ஹாரர் உள்ளிட்ட விஷயங்கள் மட்டுமே படத்தில் இடம்பிடித்தது. முன்னணி நடிகர்கள் யாருமே இல்லாமல் இந்தளவுக்கு சாதனை புரிந்திருப்பதை வைத்து வர்த்தக நிபுணர்கள் கொண்டாடி தீர்க்கிறார்கள்.அமர் கவுசிக் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர், பங்கஜ் திரிபாதி, அபிஷேக் பேனர்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தினை தினேஷ் விஜயன் மற்றும் ஜோதி தேஷ்பாண்டே இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள்.

Share this story