அடேங்கப்பா… ஷாஹித் கபூர் சம்பளத்துல இத்தன கோடி குறச்சிக்கிட்டாரா?
கொரோனாவால் தயரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியைக் குறைக்க பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் தனது ஊதியத்தைக் குறைத்துக் கொள்ள முன்வந்துள்ளார்.
தெலுங்குல நானி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஜெர்சி படம் தற்போது ஷாஹித் கபூர் நடிப்பில் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக ரூ .33 கோடி ஊதியம் மற்றும் இலாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் ஆகியவை கொடுக்கப்படுவதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது கொரோனா நெருக்கடையில் இருப்பதால் ஊதியத்தைக் குறைத்துக்கொள்ள தயாரிப்பு நிறுவனம் ஷாஹித்திடம் கேட்டுள்ளனர். 33 கோடி ஊதியம் பெற இருந்த ஷாகித் தனது சம்பளத்தில் 8 கோடி ரூபாய் குறைத்துள்ளார். அதனால் அப்படத்திற்கு ரூ 25 கோடி ரூபாய் ஊதியமாக பெற உள்ளார். . இருப்பினும், இலாப பகிர்வு விதிமுறைகள் அப்படியே இருக்கும். இருந்தாலும் இந்த ஊதிய குறைப்பு தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய உதவியாக அமைந்துள்ளது.
டோலிவுட்டில் ஏற்கனவே, ஒரு நாளைக்கு ரூ .20,000 க்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் ஒரு படத்திற்கு ரூ .5 லட்சத்துக்கு மேல் வசூலிக்கும் டெக்னீஷியன்களுக்கு லாக்டவுனிற்கு முன்பு அவர்கள் வாங்கிய சம்பளத்திலிருந்து 20 சதவீதம் குறைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டுள்ளனர்.
தற்போது தமிழ் நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்களும் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பல தயாரிப்பாளர் வலியுறுத்தி வருகின்றனர்.