'ஜவான்'-ல் விஜய்க்கு நோ சொன்ன அட்லி... அப்போ யாருன்னு தெரியுமா ?

jawaan

ஷாருக்கானின் 'ஜவான்' படத்தில் தெலுங்கு நடிகர் ஒருவர் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 பாலிவுட்டின் முன்னணி நடிகராக ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜவான்’. இந்த படத்தை பிரபல இயக்குனர் அட்லி இயக்குகிறார். சுமார் 200 கோடியில் உருவாகும் இப்படத்தை ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்து வருகிறார். 

jawaan

இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக விஷ்ணு பணியாற்றி வருகிறார். இந்தி, தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. 

ஏற்கனவே இப்படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவல் உண்மையில்லையாம். அதற்கு பதிலாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவரிடம் இயக்குனர் அட்லி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். 

Share this story