சர்ச்சைக்கு நடுவே வெளியான ஷாருக்கானின் 'பதான்'... நாடு முழுவதும் பேனரை எரித்து போராட்டம் !

pathan

சர்ச்சைக்கு நடுவே ஷாருக்கானின் 'பதான்' திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பதான்'. இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரகாம் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். 

pathan

இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இதற்கிடையே இப்படத்தில் இடம்பெற்ற பேஷ்ராம் பாடலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தப் பாடலை நீக்காவிட்டால் படத்தை வெளியிட மாட்டோம் என இந்துத்துவா அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. 

pathan

இந்நிலையில் இப்படம்‌ திட்டமிட்டபடி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் மறுபுறம் ‌ இந்துத்துவா அமைப்புகள் படத்தின் பேனர்களை தீ வைத்து கொளுத்தி நாடு முழுவதும் தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர். 

Share this story