1000 கோடி வசூலை நெருங்கிய 'பதான்'... தூள் கிளப்பும் ஷாருக்கான் !

pathaan

ஷாருக்கானின் 'பதான்' திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் கூட்டணியில் உருவாகி வெளியாகி உள்ள திரைப்படம் 'பதான்'. ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள இந்த கடந்த மாதம் வெளியானது. முழுக்க முழுக்க ஆக்ஷனில் உருவாகியுள்ள இந்த ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஷாருக்கானின் திரைப்படம் வெளியாகாத நிலையில் இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. 

pathaan

இந்த படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா திரைப்படமாக இப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள ஷாருக்கான் ரசிகர்களுக்கு இந்த ஆக்ஷன் விருந்து படைத்துள்ளது. 

இந்த படம் வெளியான முதல் நாளிலேயே 100 கோடி வசூல் சாதனை செய்தது. தற்போது 20 நாட்களை கடந்த நிலையில் 951 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில நாட்களில் இது ஆயிரம் கோடியாக உயரம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் இந்தியாவில் பாகுபலி 2, டங்கல், கேஜிஎப் 2 ஆகிய படங்கள் மட்டுமே ஆயிரம் கோடி சாதனையை படைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story