ஆக்ஷன் அதிரடியில் மிரள வைக்கும் ஷாருக்கான்.. மாஸான ‘ஜவான்’ டிரெய்லர் !

jawan
ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜவான்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சிறப்புத்தோற்றத்தில் தீபிகா படுகோனே மற்றும் சஞ்சய் தத் நடித்துள்ளனர். 

jawan

இவர்களுடன் விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அனிரூத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக விஷ்ணு பணியாற்றியுள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் இப்படம் வெளியாகிறது. 

jawan

சுமார் 200 கோடியில் உருவாகும் இப்படத்தை ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்துள்ளார். வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ஆக்ஷன் அதிரடியில் உருவாகியுள்ள அந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


 

Share this story