கொரோனா நோயாளிகளுக்காக அலுவலகத்தை ஐ.சி.யு வார்டாக மாற்றிய ஷாருக் கான்!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது அலுவலகத்தை கொரோனா வார்டாக மாற்றிக்கொடுத்துள்ளார்.
கொரோனாவின் பெருந்தொற்றால் உலகமே தத்தளித்து வருகிறது. கொரோனாவின் கொடூரத்திற்கு இரையாகிய முக்கிய துறைகளில் திரைத்துறையும் ஒன்று. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக சினிமாத்துறை முடங்கியுள்ளது. அதனால் சினிமா தொழிலாளர்களும் வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர். வசதி படைத்த சினிமா பிரபலங்கள் அந்தத் தொழிலாளர்களுக்கு தங்களால் முடிந்த வகையில் உதவி செய்து கொள்கின்றனர்.
தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இந்த பெருந்தொற்று சூழலில் அரசுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். ஷாருக்கான் தனது அலுவலகத்தை கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையாக மாற்றி மும்பை மாநகராட்சியிடம் கொடுத்துள்ளார்.
ஷாருக் கான் தனது மீர் அறக்கட்டளை மூலம், இந்துஜா மருத்துவமனை மற்றும் பி. எம். சி ஆகியவற்றுடன் இணைந்து 15 படுக்கைகளுடன் ஐ. சி. யு வார்டாக மாற்றிக் கொடுத்துள்ளார். அங்கு வென்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன் இயந்திரங்கள் என பல வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஷாருக்கானின் இந்த செயல் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.