அடித்து நொறுக்கும் ஷாருக்கானின் ‘பதான்’... ‘பாகுபலி 2’, ‘கேஜிஎப் 2’ படங்களை ஓரங்கட்டியது !

ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கானின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பதான்’. ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படம் கடந்த 25-ஆம் உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கானின் நடிப்பில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் வெளியாகி முதல் நாளிலேயே 100 கோடி வசூலித்துள்ளது. இதையடுத்து நாள் ஒன்றிற்கு 100 கோடி என்ற விகிதத்தில் வசூலாகி வந்தது. 5 நாளில் 556 கோடி வசூலித்த நிலையில் சமீபத்தில் ஆயிரம் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து வருகிறார். ஏற்கனவே இந்த சாதனை செய்த பாகுபலி 2, கேஜிஎப் 2 ஆகிய படங்களின் சாதனையை முறியடித்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.