மிரட்டலாக வெளியாகும் ஷாருக்கானின் ‘ஜவான்’... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு !

jawaan

ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னணி பாலிவுட் நடிகராக ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. ஆக்ஷன் அதிரடியில் ஷாருக்கானின் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் உருவாகி வரும் இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளளது. 

jawaan

சுமார் 200 கோடியில் உருவாகும் இப்படத்தை ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

jawaan

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக விஷ்ணு பணியாற்றி வருகிறார். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஜூன் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்ட படத்தின் பணிகள் நிறைவுபெறவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிரட்டலாக உருவாகி வரும் இந்த படம் ஷாருக்கானின் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என கூறப்படுகிறது. 

Share this story