‘பதான்’ படத்தின் சூப்பர் ஹிட் வெற்றி…… - ‘ரோல்ஸ் ராய்ஸ்’ கார் வாங்கிய ‘ஷாருக்கான்’, விலை இத்தனை கோடியா!
பாலிவுட்டின் பாக்ஷா ஷாருக்கன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘பதான்’. தீபிகா படுகேன், ஜான் அப்ரகாம் நடித்த இந்த படத்தை இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். நான் கு ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியான இந்த படம் இது வரை அவரது நடிப்பில் வெளியான படங்கள் செய்த சாதனைகளை அடித்து தொம்சம் செய்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அயிரம் கோடிக்குமேல் வசூலித்து சாதனை படத்தது. இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக நடிகர் ஷாருக்கான் தனது வீட்டிற்கு புது வரவாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
அதாவது சுமார் ரூ.10 கோடி செலவு செய்து ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார். ஏற்கனவே புகாட்டி, பென்ட்லி, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட பல சொகுசு கார்களை ஷாருக்கன் தனக்கு சொந்தமாக்கிய நிலையில் தற்போது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் காரும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பதான் படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீயின் 'ஜவான்' மற்றும் ராஜ்குமார் ஹிரானியின் 'டன்கி' அகிய படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து 'டைகர்3' படத்தில் பதானின் நீட்சியான கேமியோ ரோல் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.