'1000 கோடி' க்ளப்பில் இணைந்த ‘பதான்’ – தெறிக்க விடும் ஷாருக்கான்.

photo

பாலிவுட் பாஷா ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் உலக அளவில் 1000 கோடியை வசூலித்து புதிய சாதனையை படைத்துள்ளது.

photo

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் கூட்டணியில் மாஸ்ஸாக தயாரான திரைப்படம் ‘பதான்’.   இந்த படத்தின் இவர்களோடு இணைந்து ஜான் ஆபிரஹாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  தமிழ், தெலுங்கு,மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

photo

மிக பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை உலகம் முழுவதும் பெற்றது.  இந்த நிலையில் படம் வெளியாகி சரியாக 27வது நாளில் உலகம் முழுவதும் 1000 கோடியை வசூலித்துள்ளது.  அதாவது இந்திய அளவில் 623 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 377 கோடி ரூபாயும் என மொத்தமாக உலக அளவில் 1000 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

photo

தங்கல், பாகுபலி 2, கேஜிஃப் 2, ஆர் ஆர் ஆர் அகிய படங்கள் தான் இது வரை இந்திய அளவில் 1000 கோடி க்ளப்பில் உள்ள திரைப்படங்கள், இந்த வரிசையில் தற்போது ஷாருக்கானின் பதான் திரைப்படமும் 5வது திரைப்படமாக இணைந்துள்ளது.  இந்த தகவலால் ஷாருக்கானின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.



 

Share this story