சிங்கக்குட்டிக்கு பால்கொடுத்த நடிகை ! வைரலாகும் வீடியோ !
பிரபல பாலிவுட் நடிகை ஷாமா சிக்கந்தர் சிங்கக் குட்டியை தன் மடியில் உட்கார வைத்து பால் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஷாமா சிக்கந்தர், மன், அன்ஸ்: த டெட்லி பார்ட், த கான்ட்ராக்ட், பைபாஸ் ரோடு போன்ற பாலிவுட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பட வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் இவர் சின்னத்திரை சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் வெப் சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

தற்போது சிங்கள் ஆக இருக்கும் இவர் விரைவில் துபாயில் உள்ள தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்யவிருக்கிறார்.சமூக வலைத்தளங்களில் அக்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். தற்போது ஒரு சிங்க குட்டியை தன் மடியில் உட்கார வைத்து அவர் பால் புட்டியில் பசி ஆற்றும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சிங்கக்குட்டி அவர் மீது அழகாக உட்கார்ந்து பால் குடிக்கிறது.
சிங்கக் குட்டியும் இந்த பெரிய குட்டியும் செய்யும் சேஷ்டைகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைகிறது. மேலும் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருக்கும் அவர் அந்த சிங்கக்குட்டியை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று வளர்க்க ஆசை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.