ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங்க் நடிப்பில் மீண்டு உருவாகும் அந்நியன்… அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!
ஷங்கர் இயக்கத்தில் அந்நியன் படம் இந்தியில் உருவாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2005-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. விக்ரம் அம்பி, ரெமோ, அந்நியன் என மூன்று வேடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தமிழ் சினிமாவில் அதுவரை அப்படியான திரைப்படம் வெளியானத்தில்லை. வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான அப்படத்தை மக்கள் கொண்டாடினர்.
தற்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்நியன் திரைப்படம் இந்தியில் உருவாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார். பென் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
ஷங்கர் தற்போது ராம் சரண் படத்திற்காக பணியாற்றி வருகிறார். அந்தப் படத்தை முடித்ததும், அந்நியன் படத்தின் பணிகளைத் துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“இந்த தருணத்தில், என்னை விட வேறு யாரும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள். அதிரடி பிளாக்பஸ்டர் அந்நியன் படத்தின் தழுவலை இந்தியில் ரன்வீர் சிங் இயக்கத்தில் மீண்டும் கொண்டு வர இருக்கிறோம்” என்று ஷங்கர் தெரிவித்துள்ளார்.