ஷாருக்கானின் படத்தை கைவிட்டாரா அட்லி ?... புதிய தகவல் !

sharuk khan movie

ஷாருக்கானின் படத்தை அட்லி கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் இயக்குனரான அட்லி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க ஆரம்பித்தார். 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் ஷாரூக்கான் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இந்த படத்தின் கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

sharuk khan movie

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக விஷ்ணு பணியாற்றி வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு சில நாட்கள் மட்டுமே நடைபெற்றது. அந்த நேரத்தில் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கியதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டடது.

sharuk khan movie

இதையடுத்து இந்த படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்று தெரியாத நிலை இருந்தது. இந்நிலையில் இப்படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக ஷாருக்கானின் கால்ஷீட் இல்லாதததும், கதை விவாதத்திற்கு பல கோடி ரூபாய் செலவானதும் என்று கூறப்படுகிறது. அதோடு இவ்வளவு நாட்களாகியும் படப்பிடிப்பு துவங்காதது ஷாருக்கான் மற்றும் அட்லி இடையே மனகசப்பை ஏற்படுத்தியுள்ளதாம். அதனால்தான் படத்தை முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

Share this story