இணையத்தில் லீக்கான ‘ஜவான்’ ஆக்ஷன் காட்சி... அதிர்ச்சியில் இயக்குனர் அட்லி !

jawaan

ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் காட்சி ஒன்று இணையத்தில் லீக்கானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

jawaan

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக விஷ்ணு பணியாற்றி வருகிறார். இந்தி, தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. சுமார் 200 கோடியில் உருவாகும் இப்படத்தை ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்து வருகிறார். 

jawaan

தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் க்ளைமேக்ஸ் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்று இணையத்தில் லீக்காகி உள்ளது. வேகமாக பரவி வந்த இந்த காட்சியை பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது இந்த காட்சி இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story