ஷாருக்கானின் அதிரடியில் உருவாகும் ‘ஜவான்’... முக்கிய அப்டேட்

jawaan
 ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

jawaan

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக விஷ்ணு பணியாற்றி வருகிறார். இந்தி, தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. சுமார் 200 கோடியில் உருவாகும் இப்படத்தை ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்து வருகிறார். 

தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் க்ளைமேக்ஸ் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் ஷாருக்கான் பகுதி படப்பிடிப்பு நிறைவுபெற்றுவிட்டது. மொத்த படப்பிடிப்பும் இந்த மாத இறுதிக்குள் நிறைவுபெறும். இதையொட்டி மே முதல் வாரத்தில் படத்தின் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதையடுத்து ஜூன் 2-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story