உலக அளவில் 780 கோடி வசூல்... வாயை பிளக்க வைக்கும் ‘பதான்’ வசூல் !

pathaan

ஷாருக்கானின் ‘பதான்’ படம் உலகளவில் 780 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. 

கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கானின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பதான்‘. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த 25-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

pathaan

ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த படம் உலக அளவில் 5 நாளில் 556 கோடி வசூலித்தது. இந்தியாவில் மட்டும் சுமார் 275 கோடி வசூலித்திருந்தது. இந்நிலையில் இந்த படம் 11 நாளில் உலக அளவில் 780 கோடி வசூலித்து சாதனை செய்துள்ளது. அதேநேரம் இந்தியாவில் மட்டும் 481 கோடி வசூலித்துள்ளது. இதனால் 400 கோடி கிளப்பில் இந்த படம் இணைந்துள்ளது. 

pathaan

இந்தப் படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கிடையே இப்படம் வெளியாவதற்கு முன்பு பல எதிர்ப்புகள் கிளம்பியது. அதேநேரம் தொடர்ந்து பாலிவுட் படங்கள் தோல்வி அடைந்து வருவதால் இந்த படம் வெற்றிப்பெறுமா என சந்தேகமும் எழுந்த நிலையில் ‘பதான்’ சூப்பர் ஹிட்டடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story