“இது ஷாருக்கானின் வெறியாட்டம்”.. மிரட்டலான ‘ஜவான்’ முன்னோட்ட வீடியோ !

jawan

 ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜவான்‘ படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

‘பதான்‘ படத்திற்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. இந்த படம் வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  சுமார் 250 கோடியில் உருவாகும் இப்படத்தை ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்து வருகிறார். 

jawan

இந்த படத்தின் ப்ரீ பிசினஸ் தற்போது வரை 250 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் ரிலீசுக்கு முன்னரே போட்ட முதலீட்டை வசூலித்துள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. அனிரூத் இசையில் இப்படம் உருவாகி வருகிறது. 

jawan

இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

jawan

இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் வெறித்தனமான லுக்கில் ஷாருக்கான் இருக்குகிறார். காட்சிகள் அனைத்தும் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா ஸ்டைலிஷ்ஷான லுக்கில் இருக்கிறார். இந்த வீடியோ வரவேற்பை பெற்றுள்ளது. 

 

 

Share this story