அக்ஷய் நடிப்பில் 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக்... இணையத்தைக் கலக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!

‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக் படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
சூர்யா மற்றும் சுதா கொங்கரா கூட்டணியில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. டெக்கான் ஏர்லைன்ஸ் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது.
சர்வதேச அளவில் பல அங்கீகாரங்களை பெற்றுள்ள இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்த படத்தையும் இயக்குக்கிறார். 2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும், அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. இந்த படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார்.
இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு துவங்கியது. தற்போது சூரரைப் போற்று இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ராதிகா மதன் என்பவர் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
"மங்களகரமாக தேங்காய் உடைத்து, மனதில் ஒரு சிறிய பிரார்த்தனையுடன், கனவுகள் மற்றும் அதன் சக்தியைப் பற்றிய இன்னும் பெயரிடப்படாத எங்கள் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம். உங்களிடம் ஏதேனும் தலைப்புப் பரிந்துரைகள் இருந்தால், பகிரவும் மற்றும் நிச்சயமாக உங்கள் வாழ்த்துகள் வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.