“சிங்கம் அகெய்ன் எனது 10வது ரூ.100 கோடி கிளப் படம்” - ரோஹித் ஷெட்டி

rohith shetty

கடந்த நவம்பர் 1-ம் தேதி பாலிவுட்டில் வெளியான ‘சிங்கம் அகெய்ன்’ திரைப்படம் விரைவாக ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ள நிலையில், “இது என்னுடைய 10-வது ரூ.100 கோடி கிளப் திரைப்படம்” என இயக்குநர் ரோஹித் ஷெட்டி பெருமை தெரிவித்துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் வெளியானது ‘சிங்கம்’ திரைப்படம். 2014-ல் ‘சிங்கம் ரிட்டர்ன்’ வெளியானது. இரண்டு படங்களும் பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை குவித்தன. தற்போது இதன் சீக்வலாக ‘சிங்கம் அகெய்ன்’ 3-வது பாகமாக உருவாகியுள்ளது. அதில் அஜய் தேவ்கன், கரீனா கபூர், தீபிகா படுகோன், ஜாக்கி ஷெராஃப், டைகர் ஷெராஃப், ரன்பீர் கபூர், அக்‌ஷய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.singam again

இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விரைவாக ரூ.100 கோடி வசூலை எட்டி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக பேசியுள்ள படத்தின் இயக்குநர் ரோஹித் ஷெட்டி, “ரூ.100 கோடி வசூலை எட்டிய என்னுடைய 10-வது திரைப்படம் இது. என்னுடைய 16 படங்களிலும் தொடர்ச்சியாக பார்வையாளர்களின் அன்பும், வரவேற்பும் தொடர்ச்சியாக எனக்கு கிடைத்து வருகிறது. அதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

ரோஹித் ஷெட்டியின் ரூ.100 கோடி கிளப் படங்கள்: கோல்மால் 3 (2010), சிங்கம் (2011), போல் பச்சன் (2012), சென்னை எக்ஸ்பிரஸ் (2013), சிங்கம் ரிட்டர்ன்ஸ் (2014), தில்வாலே (2015), கோல்மால் அகெய்ன் (2017), சிம்பா (2018), சூரியவன்ஷி (2021), ‘சிங்கம் அகெய்ன் (2024).

Share this story