சோனு சூட் இனிமேல் படங்களில் வில்லனாக நடிக்க முடியாது… பிரபல பாலிவுட் நடிகர் கருத்து!
கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் பல மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார் நடிகர் சோனு சூட். இன்று மக்களால் ரியல் ஹீரோ என்று கொண்டாடப்பட்டு வருகிறார். ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி ஏற்படுத்தி கொடுத்து உணவு தங்கும் வசதி ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.
தனது பிறந்த நாள் பரிசாக வேலையில்லாத மூன்று லட்சம் பேருக்கு பல நிறுவனகளின் உதவியுடன் வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதாக அறிவித்தார். பின்னர் ஆதரவற்ற 3 குழந்தைகளை தத்தெடுத்தார். இன்னும் லிஸ்ட் கொண்டே தான் போகிறது.
இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் அதுல் கத்ரி சோனு சூட் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” சோனு சூட் இனிமேல் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் ஒருபோதும் நடிக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். இனி மக்கள் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள சோனு சூட் ‘ புது இன்னிங்க்ஸ் தொடங்குவதற்கான நேரம் பாய்’ என்றுள்ளார். சோனு சூட்டின் இந்த பதிலுக்கு ட்விட்டரில் ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Time to play New Innings bhai ❣️🙏 https://t.co/bfdULsRIoz
— sonu sood (@SonuSood) August 23, 2020