மகனுக்கு பல கோடி மதிப்புள்ள காரை பரிசளித்த சோனு சூட்... சர்ச்சை குறித்து விளக்கம்!

sonu-sood-car

தனது மகனுக்கு விலை உயர்ந்த காரை பரிசளித்தது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு பதில் அளித்துள்ளார். 

சில தினங்களுக்கு முன்பு தந்தையர் தினத்தை முன்னிட்டு சோனு சூட் தனது மகன் இஷாந்த்துக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள ஆடம்பர காரை பரிசாக அளித்ததாக வதந்திகள் பரவின. சோனு சூட் மற்றும் அவரது மகன் காரில் இருந்து இறங்கும் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்கள் இணையத்தில் வைரல் ஆகின. இஷாந்த் 18 வயதை பூர்த்தி செய்ததால் சோனு சூட் அவருக்கு கார் பரசித்தளித்தாகக் கூறப்பட்டது. 

தனது வீட்டை வித்து மக்களுக்கு உதவி செய்ததாகக் கூறிய சோனு சூட் தற்போது 3 கோடி மதிப்புள்ள காரை மகனுக்கு பரிசளிக்க மட்டும் எப்படி காசு வந்தது என்று பலரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். தற்போது சோனு இந்த சர்ச்சைகள் குறித்து விளக்கமளித்துள்ளார். 

“இதில் எந்த உண்மையும் இல்லை. எனது மகனுக்காக நான் கார் வாங்கவில்லை. டெஸ்ட் டிரைவ் செய்வதற்காகவே கார் எங்கள் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. நாங்கள் ஒரு டெஸ்ட் டிரைவ் செய்தோம். அவ்வளவு தான் நாங்கள் காரை வாங்கவில்லை. தந்தையர் தினத்தில் நான் ஏன் எனது மகனுக்கு ஒரு விலையுயர்ந்த பரிசை வழங்க வேண்டும்.  தந்தையர் தினத்திற்காக அவர் தான் எனக்கு பரிசளிக்க வேண்டும் அல்லவா? தந்தையர் தினத்தில் எனது இரண்டு மகன்களும் எனக்கு பரிசளிக்கக்கூடிய சிறந்த பரிசு என்னவென்றால், அவர்களுடன் நேரத்தை செலவிடுவது. எனது பரபரப்பான படப்பிடிப்புகள் காரணமாக, நான் அவர்களுடன் நேரம் செலவழிக்க வாய்ப்பு குறைவாகவே அமைகிறது. அவர்கள் வளர்ந்துவிட்டார்கள், அவர்கள் பிஸியாக இருக்கிறார்கள். அவர்கள் என்னுடன் கழித்த பொழுதுகள் தான் எனக்கு கிடைக்கும் ஆடம்பரமான பரிசு." என்று தெரிவித்துள்ளார். 

Share this story