தள்ளிப்போகும் சூரைப்போற்று இந்தி ரீமேக்... காரணம் என்ன தெரியுமா ?

soorarai pottru hindi

'சூரரைப்போற்று' படத்தின் இந்தி ரீமேக் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழில் சூர்யா மற்றும் சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. கொரானா நேரத்தில் ஓடிடியில் வெளியான இப்படம் தமிழை தாண்டி பல மொழி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியில் இப்படம் ரீமேக்காகி வருகிறது. 

 sooraraipottru

பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இப்படம் இந்தியிலும் உருவாகிறது. இந்த படத்தில் சூர்யா நடித்த மாறன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ராதிகா மதன் நடித்து வருகிறார். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

 sooraraipottru

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும், அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றன. இப்படம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பணிகள் நிறைவுபெறாத நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. 

Share this story