சூரரைப் போற்று இந்தி ரீமேக் படப்பிடிப்பு... மங்களகரமாக தேங்காய் உடைத்து துவங்கிய அக்ஷய் குமார்!

‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளது.
சூர்யா மற்றும் சுதா கொங்கரா கூட்டணியில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது.
சர்வதேச அளவில் பல அங்கீகாரங்களை பெற்றுள்ள இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்த படத்தையும் இயக்குக்கிறார். 2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும், அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. இந்த படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார்.
நேற்று இந்தி ரீமேக்கின் துவக்க பூஜை நடைபெற்றது. அதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார். இந்நிலையில் இன்று படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. தேங்காய் உடைத்து படப்பிடிப்பை துவங்கியுள்ள வீடியோவை அக்ஷய் குமார் வெளியிட்டுள்ளார்.
With the auspicious coconut-breaking and a small prayer in our heart, we begin the filming of our yet untitled film which is about dreams and the power of it 💫 In case you’ll have any title suggestions, do share and of course your best wishes 🙏🏻 pic.twitter.com/nSUmWXbWlK
— Akshay Kumar (@akshaykumar) April 25, 2022
"மங்களகரமாக தேங்காய் உடைத்து, மனதில் ஒரு சிறிய பிரார்த்தனையுடன், கனவுகள் மற்றும் அதன் சக்தியைப் பற்றிய இன்னும் பெயரிடப்படாத எங்கள் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம். உங்களிடம் ஏதேனும் தலைப்புப் பரிந்துரைகள் இருந்தால், பகிரவும் மற்றும் நிச்சயமாக உங்கள் வாழ்த்துகள் வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.