இந்தியில் ரீமேக்காகும் ‘சூரரைப்போற்று’... ரிலீஸ் தேதி அறிவிப்பு !

soorarai pottru hindi

இந்தியில் உருவாகியுள்ள ‘சூரரைப்போற்று’ ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழில் சூர்யா நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இப்படம் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டம்.

soorarai pottru hindi

நல்ல விமர்சனங்களை பெற்ற இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக்காகி வருகிறது. இதில் சூர்யா நடித்த மாறன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ராதிகா மதன் நடித்து வருகிறார். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

soorarai pottru hindi

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும், அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து  இந்த படத்தை தயாரித்து வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story