ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பின்னர் சென்னை வீட்டில் தங்கிய மகள்கள்!
நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி மர்மமான முறையில் துபாயில் உயிரிழந்தார்.
இதனால் ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், மகள்கள் ஜான்வியும் குஷியும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பின்னர் அவர்கள் யாருமே சென்னையில் உள்ள தங்கள் சொந்த வீட்டிற்கு செல்லாமல் இருந்தனர்.
சென்னைக்கு ஏதேனும் வேலையாக வந்தாலும் அங்கு தங்குவதே இல்லை.துபாய்க்கு செல்வதற்கு முன்பு போனி கபூரின் பிறந்தநாளை சென்னை வீட்டில் தான் ஸ்ரீதேவியும் குடும்பத்தினரும் கொண்டாடினர்.
இந்நிலையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீதேவியின் மகள்கள் சென்னை வீட்டில் தங்கியுள்ளனர் .
குஷியின் 20 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதற்கே அவர்கள் இங்கே வந்ததாக கூறப்படுகிறது. பொதுவாக அவர்கள் பிறந்தநாளை வெளிநாடுகளில் கொண்டாடுவர். ஆனால் இந்த முறை அவர்கள் சென்னை வீட்டிற்கு வந்திருப்பது ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. மேலும் ஜான்வியின் நெருங்கிய தோழியான தனிஷாவும் அவர்களுடன் தங்கியுள்ளார்.ஸ்ரீதேவிக்கு சொந்தமாக பல வீடுகள் இருந்தாலும் சென்னையில் உள்ள இந்த வீடுதான் ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்த வீடு என்பது குறிப்பிடத்தக்கது.