பாத்ரூம்ல என்ன பண்ணுவீங்க, உங்க அண்டர்வேர் என்ன கலர்… நெட்டிசன்களின் எடக்குமடக்கு கேள்விகளில் சிக்ஸர் அடித்த ஷாருக் கான்!

பாத்ரூம்ல என்ன பண்ணுவீங்க, உங்க அண்டர்வேர் என்ன கலர்… நெட்டிசன்களின் எடக்குமடக்கு கேள்விகளில் சிக்ஸர் அடித்த ஷாருக் கான்!

“உங்கள் அண்டர்வேர் கலர்?” என்ன என்று கேட்டவருக்கு ஷாருக்கான் அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ஷாருக் கான். பாலிவுட் பாட்ஷா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர். இந்தியாவின் ஐகான் என்று கூட இவரைச் சொல்லலாம். ஜீரோ படத்தின் தோல்வியை அடுத்து ஷாருக் கான் படங்களில் நடிப்பதில் இருந்து நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டுள்ளார்.

பாத்ரூம்ல என்ன பண்ணுவீங்க, உங்க அண்டர்வேர் என்ன கலர்… நெட்டிசன்களின் எடக்குமடக்கு கேள்விகளில் சிக்ஸர் அடித்த ஷாருக் கான்!

தற்போது மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கத் தயாராகி வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு ஷாருக்கான் பதிலளித்தார். அதில் வழக்கம் போல சிலர் எடக்குமடக்கான கேள்விகளையும் ஷாருக் கான் முன் வைத்தனர்.

அதற்கு சாதுர்யமாக பதிலளித்து, தான் பாலிவுட்டின் பாட்ஷா என்பதை நிரூபித்துக் காட்டினார் ஷாருக். ட்விட்டர்வாசி ஒருவர் “உங்கள் அண்டர்வேர் என்ன கலர்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு “இந்த மாதிரியான அறிவுப்பூர்வமான, சிறப்பான கேள்விகளுக்கு பதிலளிக்கத் தான் இங்கே வந்திருக்கிறேன்” என்று பதிலளித்தார்.

இன்னொருவர் “நீங்கள் உங்கள் பாத்ரூமில் என்ன செய்வீர்கள்?” என்று கேள்வியெழுப்பியதற்கு “உங்களுக்கு விடியோவை அனுப்பி வைக்கிறேன்….உங்களுடைய ஆர்வமும் கற்றலுக்கான ஏக்கமும் என் இதயத்தைத் தொட்டுவிட்டது” என்று பதிலளித்து கெத்து காட்டியுள்ளார்.

இதுபோக இன்னும் பல சுவரசியமான பதில்களையும் ஷாருக் வழங்கியுள்ளார். “கொல்காத்தா அணி ஐபிஎல் கப் ஜெயிச்சுக்குமா என்ற கேள்விக்கு “நானும் நம்புகிறேன். மேலும் அந்த கப்பில் தினமும் டீ குடிக்க விரும்புகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

Share this story