அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜரான சுஷாந்த் சிங் சகோதரி… சூழ்ந்த பத்திரிகையாளர்கள்!
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில், ஒவ்வொரு நாளும் பல்வேறு அதிர்ச்சிகர திருப்பங்கள் நடந்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது தந்தை கே.கே.சிங், சுஷாந்த்தின் காதலி ரியா மீது புகார் அளித்தார்.. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்தது.
அவர் அளித்திருந்த புகாரில், ரியா சுஷாந்தின் வங்கிக் கணக்கிலிருந்து 15 கோடி ரூபாயை வேறொரு வங்கிக் கணக்குக்கு மாற்றியதாகவும், தனது மகனுக்கு மன ரீதியாக துன்புறுத்தல் கொடுத்துவந்ததாகவும் தெர்வித்துள்ளார். இதனையடுத்து ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது..
தற்போது மத்திய அரசு வழிகாட்டுதலின் படி இந்த வழக்கை சிபிஐ கையிலெடுத்துள்ளது.. முதற்கட்டமாக ரியா, அவரது தந்தை இந்திரஜித், தாய் சந்தியா, சகோதரர் ஷாவிக், சுஷாந்த்தின் மேனேஜர் சாமுவேல் மிரான்டா, முன்னாள் மேனேஜர் ஷ்ருதி மோடி உள்ளிட்ட ஆறு பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் படி தற்கொலைக்கு தூண்டுதல், நம்பிக்கை மோசடி, திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிஐ வாழக்குப் பதிந்துள்ளது. இந்நிலையில் பண மோசடி வழக்கு விசாரணைக்காக நடிகை ரியா சக்ரோபர்த்தி, நேற்று அமலாக்கத்துறை முன்பு நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
அமலாக்க இயக்குநரக அலுவலகத்திற்கு சுஷாந்த் சிங் சகோதரி, மிது சிங் வந்த போது பத்திரிகையாளர்களால் சூழப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அங்கிருந்த கூட்டத்தைச் சமாளிக்க முடியாததால் மிதூ ஒரு பெண் காவல்துறை அதிகாரியால் அழைத்துச் செல்லப்படுகிறார்.
#WATCH Sushant Singh Rajput death case: Sushant’s sister Mitu Singh (being escorted by a female police officer) at Enforcement Directorate (ED) office in Mumbai. pic.twitter.com/0i0WvaNSBT
— ANI (@ANI) August 11, 2020
இன்று முன்னதாக, சுஷாந்தின் முன்னாள் மேனேஜர் ஸ்ருதி மோடியும், சுஷாந்தின் நண்பர் சித்தார்த் பிதானியும் விசாரணைக்கு அமலாக்க இயக்குநரகம் அலுவலகத்திற்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், சுஷாந்தின் மரண வழக்கில் விசாரணையை மும்பைக்கு மாற்றக் கோரி ரியா சக்ரவர்த்தியின் மனுவுக்கு உச்ச நீதிமன்ற விசாரணை தொடங்கியுள்ளது.