வருமான வரிச் சோதனையை கலாய்த்துத் தள்ளிய டாப்ஸி… வைரலாகும் பதிவு!
1615029191000
வருமான வரிச் சோதனைக்குப் பின்னர் நடிகை டாப்ஸி வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகை டாப்ஸி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் நடத்திய வருமான வரிச் சோதனையில் கிட்டத்தட்ட 650 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு வந்தது.
அந்த சோதனையை அடுத்து இயக்குனர் அனுராக் காஷ்யப் தன்னுடைய அலுவலகத்தில் சிடி, டிவிடி-க்கள் அடங்கிய அறையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியது. தற்போது வருமான வரிச் சோதனை குறித்து டாப்ஸி வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
3 நாட்களாக 3 விஷயங்களைத் தீவிரமாகத் தேடி வருகிறேன்.
- பாரிசில் நான் வைத்திருப்பதாகக் கூறப்படும் பங்களாவின் சாவி. ஏனெனில் கோடை காலம் வேறு நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.
- நான் கணக்கில்லாமல் வைத்திருந்ததாக கூறப்படும் 5 கோடிக்கான ஆவணங்கள். அதை நான் பிரேம் போட்டு மாட்டி எதிர்காலத்தில் பார்க்கவேண்டும். ஏனெனில் அந்தத் தொகை நான் நடிக்க மாட்டேன் என்று என்னால் மறுக்கப்பட்டவை.
- நம் மதிப்பிற்குரிய நிதியமைச்சரின் கூற்றுப்படி என்னிடம் 2013-ம் ஆண்டு நடந்த வருமான வரிச் சோதனைக்கான நினைவுகள். ” என்று தெரிவித்துள்ளார்.
கங்கானாவின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.