‘லஸ்ட் ஸ்டோரீஸ்' இரண்டாம் பாகத்தில் நடிக்கும் தமன்னா & மிருனாள் தாகூர்!

tamanna-and-mrunal-33

‘லஸ்ட் ஸ்டோரீஸ்' இரண்டாம் பாகத்தில் தமன்னா மற்றும் மிருனாள் தாகூர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்தியில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற அந்தோலஜி தொடர் மிகவும் பிரபலமானது. காமம் அதைச் சுற்றி நடக்கும் நான்கு கதைகள் என்ற வகையில் அந்தப் படம் உருவாகியிருந்தது. கரண் ஜோஹர், ஜோயா அக்தர், அனுராக் காஷ்யப் மற்றும் திபாகர் பானர்ஜி நான்கு வெவ்வேறு பாகங்களை இயக்கியிருந்தனர்.

தற்போது ​​லஸ்ட் ஸ்டோரிஸ் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. அதில் ஒரு பகுதியை சுஜோய் கோஷ் இயக்குகிறார்.

அதில் நடிகை தமன்னா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் இந்தப் படத்தில் நடிக்கிறார். லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்தின் படப்பிடிப்பில் செப்டெம்பர் மாதம் தமன்னா இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. 

Mrunal-and-thamanna-3r

லஸ்ட் ஸ்டோரிஸ் 2 முதல் படத்தை விட மிகவும் பரபரப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ‘லஸ்ட் ஸ்டோரீஸ் இரண்டாம் பாகத்தில்  ஆர் பால்கி இயக்கும் பகுதியில் மிருணால் தாக்கூர், அங்கத் பேடி மற்றும் நீனா குப்தா ஆகியோரும் நடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. 

லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தில் நடித்த அனைத்து நடிகைகளும் கிளாமரின் உச்சம் சென்றனர். தமன்னா மற்றும் மிருனாள் எந்தளவுக்கு கிளாமர் மீட்டர் செட் செய்யப்போகிறார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். 

Share this story