மகா கும்பமேளாவில் வெளியிடப்பட்ட தமன்னாவின் புதிய படத்தின் டீசர்...!

tammana

நடிகை தமன்னா நடித்துள்ள புதிய படத்தின் டீசர் மகா கும்பமேளாவில் வெளியிடப்பட்டது. 

அசோக் தேஜா இயக்கத்தில் வெளிவரவுள்ள 'ஓடேலா-2' படத்தில்  நடிகை தமன்னா பெண் துறவியாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர், உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் வெளியிடப்பட்டது. விழாவில் தமன்னா தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் தமன்னா தனது குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். தொடர்ந்து சிறப்பு வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.  tammana



உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரையிலான 45 நாட்கள் இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சியில் இதுவரை 60 கோடி பக்தர்கள் புனித நீராடலில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Share this story