இந்தியில் ரீமேக் ஆகும் அருண் விஜயின் சூப்பர் ஹிட் படம்... வெளியான முக்கிய அப்டேட்!

ஆதித்யா ராய் கபூர் மற்றும் மிருணால் தாக்கூர் நடிப்பில் உருவாகி வரும் தடம் இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
நடிகர்கள் ஆதித்யா ராய் கபூர் நடிப்பில் கும்ரா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் மிருணால் தாக்கூர் கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
க்ரைம் த்ரில்லரான இப்படத்தில் ஆதித்யா இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் மிருணால் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.அறிமுக இயக்குனர் வர்தன் கேட்கர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
தமிழில் அருண் விஜய் மற்றும் தன்யா ஹோப் நடித்த தடம் படத்தின் இந்தி ரீமேக் தான் கும்ரா. கடந்த 2019ஆம் ஆண்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தில் ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ஒரே மாதிரி இரட்டையர்களை வைத்து மிகவும் விறுவிறுப்பாக நகரும் கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகியிருந்தது.
A wonderful journey has arrived at its finish line! It’s a shoot wrap for #Gumraah#AdityaRoyKapur @mrunal0801 @PintoVedika #VardhanKetkar @RonitBoseRoy @MuradKhetani #BhushanKumar #KrishanKumar @AnjumKhetani @Cine1Studios @TSeries @aseem_arora #ShivChanana @CastingChhabra pic.twitter.com/bYcaru377C
— T-Series (@TSeries) July 16, 2022