'தி காஸ்மீர் பைல்ஸ்' படத்தின் இயக்குனருக்கு 'Y' பிரிவு பாதுகாப்பு அளிக்கும் மத்திய அரசு!
'தி காஸ்மீர் பைல்ஸ்' படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரிக்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் வரலாறு காணாத சாதனை படைத்து வருகிறது. கூடிய விரைவில் 100 கோடி வசூலை தொட்டுவிடும் என்பது உறுதி. 600 தியேட்டர்களுடன் வெளியான இப்படம் தற்போது 2000 தியேட்டர்களுக்கு மேல் ஓடிக்கொண்டிருக்கிறது.
அதே சமயம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ ஒருதலைப்பட்சமான கதை என்று விமர்சகர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் பலரும் கூறி வருகின்றனர். 1990-களில் காஷ்மீரில் வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த உண்மை சம்பவத்தை தழுவி 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் உருவாகியுள்ளது.
எனவே இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி மீது விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இயக்குனர் விவேக்கின் பாதுகாப்பை இந்திய அரசு பலப்படுத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் விவேக்கிற்கு சிஆர்பிஎஃப் பாதுகாப்புடன் Y அந்தஸ்து பாதுகாப்பை பரிந்துரை செய்துள்ளது, மேலும் அவருக்கு எட்டு போலீசார் பாதுகாப்பு வழங்குவார்கள். பாலிவுட் மாஃபியாவுக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக முந்தைய சர்ச்சைக்குரிய நடிகை கங்கனா ரணாவத்துக்கும் அதே அளவிலான Y பிரிவி பாதுகாப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.