இந்தி வெப் தொடருக்கு இசையமைத்த சாம் சிஎஸ்... அசுர வளர்ச்சியை பார்த்து வியக்கும் திரையுலகம் !

sam cs

இந்தி வெப் தொடருக்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளது ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் மாறியுள்ளார் சாம் சிஎஸ். கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' திரைப்படத்தில் சிறந்த பின்னணி இசை கொடுத்து ரசிகர்களிடையே பிரபலமானார். அதன்பிறகு புரியாத புதிர், விக்ரம் வேதா, அடங்கமறு, ராக்கெட்ரி உள்ளிட்ட திரைப்படங்களுக்கு தனது சிறந்த இசையை கொடுத்துள்ளார். 

sam cs

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பணியாற்றி வந்த சாம் சிஎஸ் சமீபத்தில் 'விக்ரம் வேதா' இந்தி ரீமேக் முலம் இந்தியிலும் அறிமுகமாகியுள்ளார். தற்போது 'தி நைட் மேனேஜர்' என்ற வெப் தொடருக்கும் இசையமைத்துள்ளார். இந்த வெப் தொடர் நாளை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. 

sam cs

இந்த தொடருக்கு சிறந்த இசையை சாம் சிஎஸ் கொடுத்துள்ளார்.‌ இதனால் பாலிவுட்டில் சாம் சிஎஸ்க்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தமிழில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர் ஒருவருக்கு அடுத்தடுத்து பாலிவுட் வாய்ப்புகள் குவிவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஏ.ஆர்.ரகுமான், அனிரூத், ஜிவி பிரகாஷ் ஆகிய முன்னணி இசைப்பாளர்கள் இந்தியில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story