“சஞ்சய் ஒரு தீவிர போராளி”… புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சஞ்சய் தத்…மனைவி வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு!

“சஞ்சய் ஒரு தீவிர போராளி”… புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சஞ்சய் தத்…மனைவி வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு!

சில தினங்களுக்கு முன்பு பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஆக்ஸிஜன் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டதாலும், மார்பில் வலி ஏற்பட்டதாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உடனடியாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்பு சோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியது. பின்பு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகினார்.
“சஞ்சய் ஒரு தீவிர போராளி”… புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சஞ்சய் தத்…மனைவி வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு!
தற்போது சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தித்து வருகின்றனர்.
“சஞ்சய் ஒரு தீவிர போராளி”… புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சஞ்சய் தத்…மனைவி வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு!
தற்போது சஞ்சய் தத்தின் மனைவி மானயதா தத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் “சஞ்சய் விரைவில் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதிலிருந்து மீண்டு வர உங்கள் அனைவரது வலிமை மற்றும் பிரார்த்தனை எங்களுக்குத் தேவை. எங்கள் குடும்பம் இதுபோல பல இக்கட்டான சூழ்நிலை சந்தித்துள்ளது, அவை போல இதுவும் கடந்து போகும். சஞ்சயின் ரசிகர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த வேண்டுகோள், சமூகவலைதளங்களில் வெளியாகும் வதந்திகள் மற்றும் அனுமானங்களை பார்த்து ஏமாந்து போக வேண்டாம்.
“சஞ்சய் ஒரு தீவிர போராளி”… புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சஞ்சய் தத்…மனைவி வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு!
ஆனால் உங்களுடைய அன்பு மற்றும் பாசம் மூலம் எங்களுக்கு தொடர்ந்து உதவுங்கள். சஞ்சு எப்போதும் ஒரு தீவிர போராளி, மேலும் அவருக்கு எங்கள் குடும்பம் உள்ளது. எங்களுக்கு முன்னால் இருக்கும் இந்த சவாலை மீண்டு வர வேண்டும். இது கடவுள் எங்களுக்கு மறுபடியும் வைத்துள்ள ஒருதேர்வு. நாங்கள் அனைவரும் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆசீர்வாதங்களை எதிர்பார்க்கின்றோம். அதற்கு மறுபுறம் நாம் எப்போதும் பார்க்கும் ஒரு வெற்றியாளர் இருக்கிறார். நாம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்க்கையில் ஒளி மற்றும் நேர்மறை எண்ணங்களை பரவச் செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்

Share this story