மலையாளத்தில் ஹிட்டடித்த "த்ரிஷ்யம் "மூன்றாம் பாகமாக ஹிந்தியில் ரீமேக்.

Ajay devgn

மலையாளத்தில் ஹிட்டடித்த த்ரிஷ்யம் ஹிந்தியில் இரண்டு பாகமாக வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் ,பார்ட் 3 அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியாக உள்ளது .
மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடித்த த்ரிஷ்யம் மிகப்பெரிய வெற்றியடைந்தது .இப்படம் தமிழில் கமல்ஹாசன் மற்றும் கௌதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்து மாபெரும் வெற்றி பெற்றது .பின்னர் இப்படம் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிக்க முதல் பாகமும் ,இரண்டாம் பாகமும் தயாரிக்க ப்பட்டு வெற்றியடைந்தது .பின்னர் தெலுங்கு, கன்னடம் மொழியில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றது 
இந்தியில் 2015-ல் 'திரிஷ்யம்' என்ற தலைப்பிலேயே வெளியான இப்படம் நல்ல வசூல் பார்த்தது. அதில் அஜய்தேவ்கன், ஸ்ரேயா, தபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியில் 2018-ல் 'திரிஷ்யம் 2' வெளியாகி ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து தற்போது, திரிஷ்யம் 3 படத்திற்கான அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, அஜய்தேவ்கன் திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். முதல் 2 பாகத்தை இயக்கிய அபிஷேக் பதக், மூன்றாம் பாகத்தையும் இயக்க உள்ளார். டிஜிட்டல் 18 மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Share this story