ஹிந்தியில் ரீமேக் ஆகும் ராட்சசன் படம்!

ஹிந்தியில் ரீமேக் ஆகும் ராட்சசன் படம்!

இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ராட்சசன் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆனதைத் தொடர்ந்து தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது.
ஹிந்தியில் ரீமேக் ஆகும் ராட்சசன் படம்!
தமிழில் அதுவரை வெளியான அனைத்து திரில்லர் படங்களையும் அடித்து நொறுக்கியது. நிமிடத்திற்கு நிமிடம் சஸ்பென்ஸ். ஆடியன்ஸ் அனைவரையும் சீட் நுனியில் உட்கார வைத்தார் இயக்குனர். அதோடு ஜிப்ரானின் இசை படத்தை அடுத்த கட்டடத்திற்கு கொண்டு ராட்சசன் படம் அதிக ரேட்டிங் பெற்ற தமிழ் படங்களில் முதல் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தியில் ரீமேக் ஆகும் ராட்சசன் படம்!
ராட்சசன் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் பெல்லம்கொண்டா சீனிவாஸ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
ரமேஷ் வர்மா என்ற இயக்குனர் ராட்சசன் ஹிந்தி ரீமேக்கை இயக்கவிருக்கிறார். மேலும் இந்த ரீமேக்கில் முக்கிய ஸ்டார் நடிகர் ஒருவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். ஏ ஸ்டுடியோ மற்றும் ஹவிஷின் சத்யநாராயண கொனேரு இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளனர்.

Share this story