தெறி பட ரீமேக் படப்பிடிப்பில் வருண் தவான் காயம்

தெறி பட ரீமேக் படப்பிடிப்பில் வருண் தவான் காயம்

தெறி படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பின்போது நடிகர் வருண் தவான் காயமடைந்தார். 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தெறி. இந்தப் படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், ராஜேந்திரன், நடிகை மீனா மகள் நைனிகா, மகேந்திரன் உட்பட பலர் நடித்திருந்தனர். தற்போது இத்திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. விஜய் நடித்த கதாபாத்திரத்தில் வருண் தவண் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், வாமிகா நடிப்பதாகக் கூறப்படுகிறது.

தெறி பட ரீமேக் படப்பிடிப்பில் வருண் தவான் காயம்

இந்தப் படத்தை அட்லீயின் மனைவி ப்ரியா தயாரிக்கிறார். காளீஸ் இயக்குகிறார். இவர் ஜீவா நடித்த ‘கீ’படத்தை இயக்கியவர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இந்நிலையில், ஆக்‌ஷன் காட்சியை படமாக்கியபோது நடிகர் வருண் தவான் காயமடைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார்.
 

Share this story