துருவங்கள் பதினாறு இந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர்!

துருவங்கள் பதினாறு இந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர்!

‘துருவங்கள் பதினாறு’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் வருண் தவான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருவங்கள் பதினாறு இந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர்!

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான துருவங்கள் பதினாறு படத்திற்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது. படம் முழுவதும் திருப்பங்களுக்கு மேல் திருப்பங்கள் தான். தன்னுடைய முதல் படத்திலேயே கோலிவுட்டைக் கலக்கப் போகும் இயக்குனர் என்பதை நிரூபித்தார் கார்த்திக் நரேன்.

துருவங்கள் பதினாறு இந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர்!

அந்தப் படத்திற்கு ‘சங்கி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. பரினீதி சோப்ரா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்திக்காக கதையில் சில மாற்றங்களைச் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. வருண் தவான் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. சஜித் நதியாவாலா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

Share this story