பழம்பெரும் நடிகர் ஜூனியர் மெஹமூத் உயிரிழந்தார்
1702037406380
பழம்பெரும் இந்தி நடிகர் மெஹமூத் அலியின் மகன் ஜூனியர் மெஹமூத் ஆவார். இவரின் இயற்பெயர் நயீம் சயீத். சினிமா ரசிகர்கள் இவரை 'ஜூனியர் மெஹமூத்' என்று தந்தையின் பெயரிலேயே அழைத்தனர். கடந்த 1967-ம் ஆண்டு வெளியான நவுனிகல் என்ற இந்தி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமானவர் மெஹமூத். இதுவரை 260-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். இதில், 6 மராத்தி மொழி திரைப்படங்களை தயாரித்து இயக்கியும் இருக்கிறார்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, சிகிச்சை பலனின்றி மும்பையில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார்.