பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் மறைவு!

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் மறைவு!

பிரபல பாலிவுட் நடிகர் சௌமித்ரா சாட்டர்ஜி இன்று காலமானார். அவருக்கு வயது 85.

1935 ல் பிறந்த சௌமித்ரா சாட்டர்ஜி பிரபல நாடக ஆளுமை அஹிந்திரா சவுத்ரியிடமிருந்து நடிப்பைக் கற்றுக்கொண்டுள்ளார். ஆரம்பத்தில் அப்பு கதாபாத்திரத்தில் நடிக்க நிராகரிக்கப்பட்ட பின்னர், சாட்டர்ஜி இறுதியாக சத்யஜித் ரேயின் அபூர் சன்சார் (1959) படத்தின் மூலம் அறிமுகமானார். இது அப்பு வரிசை படங்களின் மூன்றாவது பாகமாகும்.

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் மறைவு!

சத்யஜித் ரேவும் சௌமித்ராவும் அபிஜன், சாருலதா, கபுருஷ், ஆரனியர் தின் ராத்ரி, அஷானி சங்கேத், சோனார் கெல்லா மற்றும் ஜோயி பாபா பெலுநாத் உள்ளிட்ட பதினான்கு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

சௌமித்ரா சாட்டர்ஜி இதுவரை பத்ம பூஷண், தாதாசாகேப் பால்கே விருது, சங்க நாடக அகாடமி விருது மற்றும் மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.

Image

அக்டோபர் 6 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சௌமித்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில வாரங்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலமானார்.

சௌமித்ரா சாட்டர்ஜி மறைவிற்கு இந்தியத் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this story