பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சலீம் அக்தர் மறைவு

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சலீம் அக்தர் காலமானார். அவருக்கு வயது 82.
70 மற்றும் 80களில் ஏராளமான இந்திப் படங்களை தயாரித்தவர் சலீம் அக்தர். 1993ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ஃபூல் ஆர் அங்கார், 1995-ல் ஆமிர்கான் நடித்த ‘பாஸி’ உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். நடிகை ராணி முகர்ஜி இந்தியில் அறிமுகமான ‘ராஜா கி ஆயேகி பாரத்’ (1997) படத்தையும் தயாரித்துள்ளார்.
இது தவிர சோரோன் கி பராத் (1980), லோஹா (1987), பட்வாரா (1989), பாஸி (1995), இஸ்ஸத் (1968), பாதல் (2000) உள்ளிட்டவை இவர் தயாரித்த முக்கிய படங்கள் ஆகும்.இந்த நிலையில் நேற்று (ஏப். 08) சலீம் அக்தர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். எனினும் இறப்புக்கான காரணம் குறித்து அவரது குடும்பத்தார் இதுவரை தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. சலீம் அக்தரின் மறைவுக்கு நெட்டிசன்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.