விக்கி கவுசல்- ராஷ்மிகா மந்தனா நடித்த "சாவா" படத்திற்கு சத்தீஸ்கரில் வரிவிலக்கு...
Fri Feb 28 2025 10:55:21 AM

விக்கி கவுசல்- ராஷ்மிகா மந்தனா நடித்த 'சாவா' படத்திற்கு சத்தீஸ்கரில் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவான திரைப்படம் 'சாவா'. லக்ஸ்மன் உடேகர் இயக்கிய இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாகவும் நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.
கடந்த 14-ம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அண்மையில் பிரதமர் மோடி சாவா படத்தை பாராட்டி இருந்தார். இந்நிலையில், 'சாவா' படத்திற்கு சத்தீஸ்கரில் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.